மங்களமேடு துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் ரத்து
மங்களமேடு துணை மின் நிலையத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதனால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அந்த மின் நிறுத்தம் பொதுமக்கள் நலன்கருதி ரத்து செய்யப்பட்டதாக லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story