கபிலர்மலை பகுதியில் மின்சார நிறுத்தம் ரத்து
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மின் வாரிய நிர்வாக காரணங்களுக்காக கபிலர்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கபிலர்மலை, சிறுகிணத்துபாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேலூர் செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர் பந்தல், அண்ணா நகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுபுதூர், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர் பாளையம், காளிபாளையம், ஆனங்கூர் மற்றும் சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வழக்கம்போல் மின்சாரம் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.