திருவலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்தடை


திருவலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்தடை
x

திருவலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்தடை ஏற்பட்டது.

வேலூர்

திருவலம்

திருவலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்தடை ஏற்பட்டது.

திருவலம் அருகே ஈ.பி.கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் சுமார் 7 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதாகி பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இருள் மூழ்கியது. இதனால் பெரிய மிட்டூர் துணை மின் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் மேல்பாடி பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகவும் மின்சாரம் தடைப்பட்டதால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனையடுத்து மின்வினியோகத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.


Next Story