4-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4-ந் தேதி முதல் 3 நாட்கள் மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) வரை 3 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் 4-ந் தேதி (திங்கட்கிழமை) நல்லவன்பாளையம், சாவல்பூண்டி, சேரியந்தல், வாணியந்தாங்கல், நொச்சிமலை, கீழ்நாச்சிபட்டு, மலபாம்பாடி, சனர்பாளையம், தண்டராம்பட்டு, டி.கே.பாளையம், கீழ்வணக்கம்பாடி, தானிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ராமஜெயம் நகர், திருவள்ளுவர் நகர், திருக்கோவிலூர் ரோடு, அருணகிரிபுரம், கலர்கொட்டாய், ஆடையூர், புனல்காடு, துரிஞ்சாபுரம், புதூர், ஓட்டேரி, பெரியகோளாபாடி, நல்லவன்பாளையம், அந்தோணியார்புரம், சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டாமுனூர், கலஸ்தம்பாடி, தண்டராம்பட்டு, சின்னையம்பேட்டை, உடையார்குப்பம், ஆத்திபாடி, புதூர் செக்கடி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) சேரியந்தல், வாணியந்தாங்கல், நொச்சிமலை, கீழ்நாச்சிபட்டு, மலப்பாம்பாடி, சனர்பாளையம், அண்ணாநகர், வரகூர், வாணாபுரம், காம்பட்டு, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, நாலாள்பள்ளம், குலமஞ்சனூர், சின்னையம்பேட்டை, உடையார்குப்பம், புளியம்பட்டி, ஆத்திபாடி, புதூர் செக்கடி, கல்நாட்டூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.