அரியமங்கலம், பொன்மலை, பீமநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


அரியமங்கலம், பொன்மலை, பீமநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

அரியமங்கலம், பொன்மலை, பீமநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுரெட்டிதெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளி தெரு, மத்திய பஸ் நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல்சாலை, அலெக்ஸ்சாண்டர்சாலை, எஸ்.பி.ஐ.காலனி, பென்வெல்ஸ்சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம்சாலை, பட்டாபிராமன்சாலை, புத்தூர் நான்குவழிச்சாலை, அருணாதியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, சோனாமீனா தியேட்டர், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல்மாரியம்மன் கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ்சாலை, லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன்காலனி, ஈ.வே.ரா.சாலை, வயலூர்சாலை, பாரதிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் (சிட்கோ காலனி), காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story