பாலையூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பாலையூர் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அலுவலகத்திற்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் அனுக்கூர் மின் பாதை தொண்டபாடி பகிர்மானத்தில் பாலையூர்-அனுக்கூர் சாலையில் செல்கின்ற உயர் மின் அழுத்த பாதை மற்றும் தாழ்வழுத்த மின் பாதையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதனால் காலை 10 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை பாலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என பெரம்பலூர் (கிராமியம்) உதவி செயற் பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story