பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக தியாகராய நகரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தியாகராய நகர்: சைதாப்பேட்டை, தாடண்டர் நகர், அண்ணாசாலை, ஜோதிமா நகர், அண்ணா நகர் தெரு, செட்டி தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சுப்பிரமணிய சாமி கோவில் தெரு, சுப்புபிள்ளை தோட்டம், பிள்ளையார் கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு.
ஐ.டி.காரிடர்: பெருங்குடி, துரைப்பாக்கம், வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மணிகோடி சீனிவாசன் நகர், பிரபு நகர், மாருதி நகர்.
பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story