எல்லீஸ்நகர், சமயநல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


எல்லீஸ்நகர், சமயநல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகர், சமயநல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை

பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகர், சமயநல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

ஆனையூர் துணைமின்நிலையம்

ஆனையூர் துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஒ.சி. நகர், ரெயிலார் நகர், சங்கீத்நகர், சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர் முழுவதும் ஆனையூர் செக்டார் (1, 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவிநகர், சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர் சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை, விசாலாட்சி மில் காலனி, பரவை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நாளை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அவனியாபுரம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் பயிற்சி கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர்் பழனி தெரிவித்தார்.

எல்லீஸ்நகர் பகுதிகள்

அதேபோல் எல்லீஸ்நகர் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே மின்நிலையத்துக்கு உட்பட்ட எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மகபூப்பாளையம், அன்சாரிநகர் 1 முதல் 7-வது தெருவரை, டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், போடி லைன், சித்தாலாட்சிநகர், ஹேப்பி ஹோம், 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேசன், வசந்த் நகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்காதோப்பு மற்றும் மேலமாசி வீதி, பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

சமயநல்லூர்

சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மென்ட், பரவைமெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர் பகுதி முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

ஒத்தக்கடை

மதுரை ஒத்தக்கடை மற்றும் நாட்டார்மங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, அந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும், ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி. அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story