கொடும்பாளூர், கோமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
கொடும்பாளூர், கோமங்கலம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை
விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அருந்தூர் துணை மின் நிலையத்திலிருந்து, விராலிமலை துணை மின் நிலையம் வரை உள்ள இடைபட்ட இடங்களில் இருக்கும் உயர் அழுத்த மின்பாதை விரிவாக்க பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே விராலிமலை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராஜாளிபட்டி, கொடும்பாளூர், கோமங்கலம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி, அத்திப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளைமதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story