கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை
கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு.ஸகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்கம்பம் மாற்றும்பணி
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கோவில்பட்டி
எனவே, கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் சீனிவாச நகர் 1 முதல் 5 வரை உள்ள தெருக்கள், பவானி அம்மன் கோவில் பகுதி, சசி மருத்துவமனை அருகில் உள்ள பகுதிகள், இனாம் மணியாச்சி பைபாஸ் ரோடு சந்திப்பு, கிழக்கு சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கும், கோவில்பட்டி சிட்கோ உபமின் நிலைய பகுதிகள், முத்துநகர், தங்கப்பன் நகர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் தடை செய்யப்படும்.
மேலும், எட்டயபுரம் உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வீரப்பட்டி, முத்துலாபுரம், மேல நம்பியாபுரம், கருப்பூர், கோட்டூர், எஸ்.எஸ்.டி.ஸ்பின்னிங் மில், ஷெர்லாக் ஸ்பின்னிங் மில், கே.ஆர்.புளு மெட்டல்ஸ் ராமனூத்து, துரைச்சாமிபுரம், சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம் ஆகிய பகுதிகளுக்கும், விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் குருமலை, வெங்கடாசலபுரம், கழுகாசலபுரம், மும்மலைப்பட்டி, பாறைப்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும்.
கழுகுமலை-கடம்பூர்
இதேபோன்று கழுகுமலை உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் சி.ஆர்.காலனி மில், பழங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும், எம்.துரைச்சாமிபுரம் உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சிவஞானபுரம், சீனி வெள்ளாளபுரம், வாகைதாவூர் ஆகிய பகுதிகளுக்கும், சன்னது புதுக்குடி உபமின் நிலையத்திலிரு்து மின்வினியோகம் பெறும் தலையால்நடந்தான்குளம், ராஜாபுதுக்குடி ஆகிய பகுதிகளுக்கும், கடம்பூர் உபமின்நிலையத்தின் வி.பி. தாழையூத்து பகுதிக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் கீழமங்கலம், மேல மங்கலம் ஆகிய பகுதிகளுக்கும், எப்போதும்வென்றான் உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் புங்கவர்நத்தம், போடுபட்டி ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.