கூடலூர்-சில்லக்குடி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
கூடலூர்-சில்லக்குடி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஆலத்தூர் தாலுகா கூடலூர் துணை மின் நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கூடலூர், இலப்பைக்குடி, கொளத்தூர், திம்மூர், சில்லக்குடி, காரைபாடி, மேத்தால், அருணகிரிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story