பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, துறையூர் சாலை, அரணாரை, அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திராநகர், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story