ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை


ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை
x

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, முடங்கியார் உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள் புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, திருவெங்கடபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

பழைய பாளையம்

அதேபோல ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம் தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னி தேவன் பட்டி, அட்டைமில் முக்கு ரோடு, அய்யனார்கோவில் பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படும்.

ராஜீக்கள் கல்லூரி, மலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்பட்டி, பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story