எஸ்.புதூர், சாலைக்கிராமத்தில் மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக எஸ்.புதூர், சாலைக்கிராமத்தில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இளையான்குடி
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக எஸ்.புதூர், சாலைக்கிராமத்தில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் நிறுத்தம்
மேலும் திருப்பத்தூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் எஸ்.புதூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுகுடிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருப்பத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.