சீர்காழி பகுதியில் இன்று மின்தடை ரத்து


சீர்காழி பகுதியில் இன்று மின்தடை ரத்து
x

சீர்காழி பகுதியில் இன்று மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

சீர்காழி

பராமரிப்பு பணிகள் காரணமாக சீர்காழி மின் கோட்டத்திற்குட்பட்ட அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடக்க இருப்பதால் வழக்கம்போல சீர்காழி பகுதியில் இன்று மின்சாரம் இருக்கும். அதற்கு பதிலாக வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய இணை செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.






Next Story