சிவகங்கை, மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெறுவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) மதகுபட்டி மற்றும் சிவகங்கை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெறுவதால் நாளை(செவ்வாய்க்கிழமை) மதகுபட்டி மற்றும் சிவகங்கை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதகுபட்டி
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் உள்ள பட்டமங்கலம் உயரழுத்த மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், வீழநேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சிவகங்கை ஊரகப்பகுதி
இதேபோல் சிவகங்கை துணை மின் நிலையத்தில் உள்ள பூவந்தி உயரழுத்த மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், களத்தூர், கரும்பாவூர், உடையநாதபுரம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது,
சிவகங்கை நகர் பகுதி
மேலும் சிவகங்கை நகர் பகுதி மின்பகிர்மானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை இந்திரா நகர் கிழக்கு, சவுக்கத்அலி தெரு, நேரு பஜார், மானாமதுரை ரோடு, இளையான்குடி ரோடு, பழைய மருத்துவமனை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
இளையான்குடி
இளையான்குடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.