பல்கலைக்கழகம், நீர்பழனி, கீரனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பல்கலைக்கழகம், நீர்பழனி, கீரனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஆவூர்:
மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான் நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு இதில் அவர் கூறியுள்ளார். குளத்தூர் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரதவீதிகள், எழில் நகர், என்.சி.ஓ.காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்டு, ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங்யூனிட், பசுமை நகர், அழகுநகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்