உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின் தடை
உப்பிலியபுரம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், வெங்கடாசலபுரம், கிருஷ்ணாபுரம், மாராடி, பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், பச்சமலை, டி.முருங்கப்பட்டி, வலையப்பட்டி, டி.மங்கப்பட்டி, கோட்டப்பாளையம், தளுகை, டி.பாதர்பேட்டை, விஸ்வாம்பாள்சமுத்திரம் தெற்கு, வடக்கு, ஏரிக்காடு, கல்லாத்துக் கோம்பை, ஆர்.கோம்பை, புதுப்பட்டி, ராஜபாளையம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், ஓசரப்பள்ளி, ஈச்சம்பட்டி, கீழப்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நாகநல்லூர், முத்தையம்பாளையம், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ெதரிவித்துள்ளார்.