உசிலம்பட்டி, பொன்மேனி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
உசிலம்பட்டி, பொன்மேனி பகுதியில் இன்று மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது
உசிலம்பட்டி, பொன்மேனி பகுதியில் இன்று மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை அரசரடி துணை மின்நிலையத்தில் உள்ள இன்டஸ்டிரியல் உயரழுத்த மின் பாதையில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சொக்கலிங்க நகர் 1 முதல் 9-வது தெரு வரை, டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி, பொன்மேனிநாராயணன் தெரு, பாரதியார் மெயின் ரோடு 1, 2-வது தெரு, சக்திவேலம்மாள் தெரு, பார்த்தசாரதி தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5-வது தெரு வரை, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெரு வரை, பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.பி.ரோடு, ஆனந்தா நகர், கவுண்டன்பட்டி, அரசு மருத்துவமனை பகுதி, ஆர்.டி.ஓ. அலுவலகம், பஸ் நிலையம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் எழுமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டி, உத்தப்புரம், வடக்கத்தியான்பட்டி, தச்சப்பட்டி அதனை சுற்றிய பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியத் துறையினர் அறிவித்துள்ளனர்.
வண்டியூரில் நாளை நிறுத்தம்
மதுரை வண்டியூர் மற்றும் இலந்தைகுளம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜுப்லி டவுன், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், உத்தங்குடி முழுவதும், உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ஸ்ரீராம்நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம். நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.