வெண்ணைமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்


வெண்ணைமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

வெண்ணைமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி, மண்மங்கலம் ஆகிய துணைமின் நிலையம் மற்றும் தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் உள்ள சாரதா காலேஜ் பீடரில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஜெகதாபி, காணியாளம்பட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, விராலிபட்டி, லந்தக்கோட்டை, வெங்கமேடு, சேலம் மெயின்ரோடு, வெண்ணைமலை, காதப்பாறை, பசுபதிபாளையம், பண்டுதகாரன்புதூர், மண்மங்கலம், செம்மடை, சிட்கோ, கடம்பன்குறிச்சி, கோடாங்கிப்பட்டி, பாகநத்தம், வெடிக்காரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story