விளாத்திகுளம், வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை


விளாத்திகுளம், வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை
x

விளாத்திகுளம், வல்லநாடு பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், வல்லநாடு பகுதியில் நாளை(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளாத்திகுளம்

தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை பழைய சுங்கச்சாவடி, முடிவைத்தானேந்தல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், வல்ல நாடு அருகே உள்ள பொட்டலூரணி விலக்கு, தெய்வச்செயல்புரம், எல்லநாயக்கன்பட்டி, ராமநாதபுரம், வல்லநாடு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, விளாத்திகுளம், கோனார்குளம், நானல் காட்டாங்குளம், சேதுராமலிங்கபுரம், கிள்ளிகுளம், அனந்தநம்பி குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ளி பகுதிகளிலும் நாளை(வியாழக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடக்கு கோவங்காடு

மேலும், குளத்தூர் அருகே உள்ள கலைஞானபுரம், முள்ளூர், கொல்லம் பரும்பு, செங்கல்படை, மார்த்தாண்டம்பட்டி, வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் அருகே உள்ள வடக்கு கோவங்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story