விருதுநகரில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மின் கோட்டத்தை சேர்ந்த பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளை வெட்டும் பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அகமதுநகர், பரங்கிரிநாதபுரம், விக்னேஷ் காலனி, மீனாட்சிபுரம், பாண்டியன் காலனி, இந்திரா காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி கிழக்கு, மேற்கு, காவேரி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சத்திர ரெட்டியபட்டி, பேராலி ரோடு, கருப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
Related Tags :
Next Story