5-ந் தேதி மின்தடை


5-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் 5-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது

தென்காசி

புளியங்குடி:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி மற்றும் வீரசிகாமணி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி 5-ந்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளியங்குடி உப மின் நிலையத்திற்கு உட்பட்ட புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபால பேரி ரத்தினபுரி இந்திரா நகர் புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரப்பேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேல புளியங்குடி முள்ளிக்குளம் தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், வீரிருப்பு, பட்டக்குறிச்சி, வடமலாபுரம், ஈச்சம்பொட்டல்புதூர் ஆகிய கிராமங்களிலும்,

வீரசிகாமணி உப மின் நிலையத்திற்கு உட்பட்ட வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்பு கோவில் சந்தை, வெண்டிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.



Next Story