கலவை பகுதியில் 18-ந் தேதி மின்நிறுத்தம்
கலவை பகுதியில் 18-ந் தேதி மின்நிறுத்தம்
ராணிப்பேட்டை
ஆற்காடு
வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த சென்னலேரி, கலவை துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 18-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலவை, வளையாத்தூர் ஒருபகுதி, பாப்பேரி, மேச்சேரி, சென்னசமுத்திரம், குட்டியம், அரும்பாக்கம், கே.வேளுர், டி.புதூர், கணியனூர், நல்லூர், மேல்நெல்லி, கலவைப்புத்தூர், பின்னத்தாங்கல், மழையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை ஆற்காடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story