நாளை மறுநாள் மின்தடை


நாளை மறுநாள் மின்தடை
x

செவல்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

செவல்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

செவல்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செவல்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேலாண்மறை நாடு, வடக்காண்மறை நாடு, கீழாண்மறை நாடு, ராமுதேவன்பட்டி, அருணாசலபுரம், வலையபட்டி, அப்பயநாயக்கன்பட்டி, அன்னபூரணியாபுரம், அலமேலுமங்கைபுரம், துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மின்தடை

அதேபோல கங்கரகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கொம்மங்கிபுரம், பாறைப்பட்டி, பந்துவார்பட்டி சூரங்குடி, சிவசங்குபட்டி, அன்பின்நகரம், எலுமிச்சங்காய்பட்டி, ஏழாயிரம்பண்ணை, கீழச்செல்லையாபுரம், ஆர்.மடத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும், வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட விஜயரங்கபுரம், சங்கரபாண்டியபுரம், சத்திரம், அக்கரைப்பட்டி, கணஞ்சாம்பட்டி, தாயில்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம், கோமாளிபட்டி, மண்குண்டன்பட்டி, பேரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி மின் செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார்.


Next Story