இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை. புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்து உள்ளார்.


Next Story