இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
மதுரை மேற்கு கோட்டம் பசுமலை துணை மின்நிலையம் எஸ்.எஸ்.காலனி மின்பாதையில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படுகிறது
மதுரை
மதுரை மேற்கு கோட்டம் பசுமலை துணை மின்நிலையம் எஸ்.எஸ்.காலனி மின்பாதையில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஜெய்நகா், தாணத்தவம் ரோடு, மீனாட்சி நகா், அனீஸ் கான்வென்ட், ஜீவனா பள்ளி, ராஜம் நகா், ராகவேந்த்ரா நகா், எம்.எம்.நகா் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளா் பழனி தொிவித்துள்ளாா்.
மதுரை மேற்கு கோட்டம் அவனியாபுரம் மின்நிலையத்தில் பராமாிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி பெருங்குடி அன்பழகன் நகா், மண்டேலா நகா், காவலா் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏா்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளைகாலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
Related Tags :
Next Story