இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

தியாகதுருகம், நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நாகலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடையநாச்சி, முகமதியார்பேட்டை, கூத்தகுடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி, கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வாணவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம், குன்னியூர், தியாகை, புக்குளம், அதையூர், பூண்டி, ஏ.குளத்தூர், சிக்காடு, சீதேவி ஆகிய ஊர்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்தார்.


Next Story