இன்று மின்தடை


இன்று மின்தடை
x

திருச்சுழி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

திருச்சுழி,

அருப்புக்கோட்டை கோட்ட மின் வாரியத்திற்கு உட்பட்ட திருச்சுழி ஒன்றியம் முத்துராமலிங்கபுரம் மற்றும் பரளச்சி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, பொம்மக்கோட்டை, கா.கரிசல்குளம், ரெட்டியபட்டி, மண்டபசாலை, செட்டிக்குளம், தும்மு சின்னம்பட்டி, பூலாங்கால், கல்லுமடம், கத்தாளம்பட்டி, ஆலடிப்பட்டி, வடக்கு நத்தம், ராஜகோபாலபுரம், மேலையூர், கல்லூரணி, தொப்பலாக்கரை, நல்லாங்குளம், குல்லம்பட்டி, சவ்வாசுபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


Next Story