இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சத்திரப்பட்டி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழ ராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

ராஜபாளையம்

அதேபோல ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி. யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர். நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்க பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story