இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சிட்டி உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் பி.எஸ்.கே. நகர், ஸ்ரீரங்கப்பாளையம், தோப்புப்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், லட்சுமியாபுரம், காட்டு தெரு, டி.பி. மில்ஸ் சாலை, ரெயில்வே பீடர் ரோடு, பூபால்பட்டி தெரு, அசோக் டாக்சி ரோடு, சிவகாமியாபுரம், சங்கரபாண்டிபுரம், முனியன் பொட்டல் தெரு, ஜவகர் மைதானம், சங்கரன்கோவில் முக்கு, சக்க ராஜா கோட்டை தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

ஆலங்குளம்

அதேபோல ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இ்ன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரிகுளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story