வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம், கிளிமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்


வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம், கிளிமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்
x

பராமரிப்பு காரணமாக வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம், கிளிமங்கலத்தில் இன்று (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் உபகோட்டத்திற்குட்பட்ட வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம் மற்றும் கிளிமங்கலம் ஆகிய மின் பாதைகளில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கவரப்பாளையம், தென்னூர், செங்கமெடு, வரதராஜன் பேட்டை, பெரிய கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், ஆண்டிமடம், பட்டிணம் குறிச்சி, அருளானந்தபுரம், கூவத்தூர், வடுகர் பாளையம், ஒலையூர் மற்றும் கிளிமங்கலம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரையும் மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story