அறந்தாங்கி, அரிமளத்தில் இன்று மின் நிறுத்தம்


அறந்தாங்கி, அரிமளத்தில் இன்று மின் நிறுத்தம்
x

அறந்தாங்கி, அரிமளத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி, அழியாநிலை ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அறந்தாங்கி நகர் பகுதி, அறந்தாங்கி சுற்றியுள்ள கிராம பகுதிகளான அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல் மற்றும் நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துபுளி, ஓணாங்குடி, சிரயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, கீரணிப்பட்டி, துறையூர், தேனிப்பட்டி, வம்பரம்பட்டி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருமயம் உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story