அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளில் இன்று மின்தடை
அரியமங்கலம், திருவெறும்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும், அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னைநகர், சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி சாலை, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.