பாலக்கரை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
பாலக்கரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை உயர் அழுத்த மின் பாதையில் நேற்று தவிர்க்க முடியாத காரணத்தினால் மின் தடை செய்யப்படாததால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. எனவே இன்று (வியாழக்கிழமை) பாலக்கரை உயர் அழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பாலக்கரை, அபிராமபுரம், ஸ்டார் வாள்பட்டறை பகுதி, எளம்பலூர் ரோடு, வடக்கு மாதவி ரோடு, உழவர் சந்தை, ஆத்தூர் ரோடு, ஆலம்பாடி ரோடு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், துறையூர் ரோடு, அரணாரை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியத்தின் பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story