புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம் பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார் பேட்டை, பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன் கொல்லை, முட்டம், புத்தூர், விலாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்த குமாரன், பெருங்காலுர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.


Next Story