ஜவகர்பஜார் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
ஜவகர்பஜார் பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
கரூர் கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை துணைமின் நிலையத்தில் பாளையம் பீடர், கரூர் துணைமின் நிலையத்தில் சின்னஆண்டாங்கோவில் மற்றும் ஜவகர்பஜார் பீடரில் மேம்பாட்டு பணிகள் இன்று (புதன்கிழமை)நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வழியாம்புதூர், பச்சப்பட்டி, ஜல்லிபட்டி, துறையூர், தாழப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, எலிகலியூர், வாசுகுமரன்பட்டி, மேட்டுப்பட்டி, புதுக்கோட்டை, முத்துகவுண்டனூர், செட்டிசெங்கம்பட்டி, பிச்சம்பட்டி, ராமானுஜம் நகர் தெற்கு, அண்ணா நகர், எல்.ஜி.பி. நகர், மகாத்மா நகர், சின்னஆண்டாங்கோவில் மற்றும் மதுரை பைபாஸ், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், கவுரிபுரம், லாரிமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story