கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story