கீழக்கரையில் இன்று மின் தடை
கீழக்கரையில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்
கீழக்கரை,
கீழக்கரை துணை மின் நிலையம் அலவாய்கரைவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் முனீஸ்வரம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story