மணப்பாறை, புத்தனாம்பட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
மணப்பாறை, புத்தனாம்பட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மணப்பாறை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டபட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய மில் பழைய காலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு குடிநீர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி, வீராகோவில்பட்டி, பாலக்கருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) மணப்பாறை கலிங்கபட்டி, முள்ளிபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான, ஓமாந்தூர், அக்னிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளகல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டத்தூர், டி.களத்தூர், தேனூர், பிரகம்பி மற்றும் எதுமலை ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.