மேலப்பாளையத்தில் இன்று மின்தடை
மேலப்பாளையத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை:
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் செல்வகாதர் தெரு, ஆசாத் ரோடு, காட்டுப்புதுத்தெரு, தெற்கு முகைதீன் பள்ளிவாசல் தெரு, வடக்கு தைக்கா தெரு, தெற்கு தைக்கா தெரு, அம்பிகாபுரம், பஜார், ஜின்னா திடல் பகுதிகள், அண்ணா வீதி, கணேசபுரம், செல்வகாதர் திடல், பஷிரப்பா தெரு, மேலகருங்குளம், பீடித் தொழிலாளர் காலனி, கீழ முன்னீர்பள்ளம், காமராஜர் நகர், ஆவரைக்குளம், பத்திரிகையாளர் காலனி, மேலமுன்னீர்பள்ளம், அன்னை நகர், சிவந்தி நகர், தருவை, ஆலங்குளம், கண்டித்தான்குளம், கீழ, மேல ஓமநல்லூர், ஆமின்புரம் 1 முதல் 7வது தெரு வரை உள்ள பகுதிகள், நேரு நகர் 1 முதல் 3-வது தெரு வரை உள்ள பகுதிகள், சித்திக்நகர், அன்னை ஹாஜிரா கல்லூரி ரோடு, அன்னை ஹாஜிரா நகர், மாட்டுச்சந்தை, பாத்திமா நகர், கெவன் சிட்டி, நேதாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.