நாகை, திருக்குவளை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


நாகை, திருக்குவளை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

நாகை, திருக்குவளை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை தெற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின்நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் திருக்குவளை, சாட்டியக்குடி, எட்டுக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, உத்திரங்குடி, கொளப்பாடு, வலிவலம், கச்சனம் ஆகிய பகுதிகளுக்கும், கீழ்வேளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், கோகூர், ஆழியூர், புலியூர், தேவூர் ஆகிய பகுதிகளுக்கும், நாகை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் புத்தூர், பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், பொய்கை நல்லூர், சிக்கல், தோணித்துறை, பரவை, பாப்பாக்கோவில், குறிச்சி ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story