தளவாபாளையம், வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தளவாபாளையம், வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் நிறுத்தம்
கரூர் மாவட்டம், ஆண்டிச்செட்டிபாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கோடந்தூர் பீடர், தொழிற்சாலை பீடர், அணைப்பாளையம் பீடர், புகழூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட தளவாபாளையம் பீடர், செல்லிவலசு நிலையத்திற்குட்பட்ட வெடிக்காரன்பட்டி பீடர், விராலிப்பட்டி பீடர், பள்ளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட வாட்டர் ஒர்க்ஸ் பீடர், தாளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட தாளப்பட்டி பீடர், அரவக்குறிச்சி நிலையத்திற்குட்பட்ட கொத்தப்பாளையம் பீடர், மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட மில் பீடர், சித்தார்த் பீடர் ஆகிய பீடர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேட்டையார்பாளையம், சி.கூடலூர், கோடந்தூர், உடையாம்பாளையம், வேட்டுப்பாளையம், நாச்சிபாளையம், மூலத்துறை, வடகரை, நடந்தை, பரமத்தி, மேக்காலூர், முடிகனம், பி.அணைபாளையம், தர்மராஜபுரம், குட்டகாடு, நானபரப்பு, குருக்காபாளையம், அய்யம்பாளையம், ஓரத்தை.
தளவாபாளையம்
தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், இனுங்கனூர், வெங்கடாபுரம், குமாரபாளையம், நவாமரத்துபட்டி, விராலிப்பட்டி, பாறையூர், சேந்தமங்கலம், ஜே.கே.நகர், மோலையாண்டிப்பட்டி, கேர்நகர், ஆறுரோடு, புத்தாம்பூர், காக்காவாடி, வையப்பம்பட்டி, குள்ளம் கேத்தம்பட்டி, ஆட்டாம்பரப்பு, கொக்காம்பட்டி, கடைவீதி, கரபட்டி, கடாகோவில், கொத்தப்பாளையம், பால்வார்பட்டி, சின்னஅய்யம்பட்டி, முத்துக்கவுண்டன்பாளையம், நாகம்பள்ளி, மலைக்கோவிலூர், கே.ரெங்கபாளையம், கீத்தப்பட்டிகாலனி, கனகபுரி ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வெள்ளியணை
இதேபோல வெள்ளியணை துணைமின் நிலையத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஓந்தாம்பட்டி, திருமலைநாதன்பட்டி, கிருஷ்ணாரெட்டியூர், பால்வார்பட்டி, துளசிக்கொடும்பு, ஜெகதாபி வடக்கு, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.