தியாகதுருகம் நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


தியாகதுருகம் நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

தியாகதுருகம் நாகலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம், நாகலூர் துணை மின் நிலையங்களில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட தியாகதுருகம் பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாகலூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி,உச்சிமேடு, உடைய நாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தகுடி, ஐவதுகுடி, வரஞ்சரம் வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி குடியநல்லூர், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம் ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்தார்.


Next Story