விருத்தாசலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
விருத்தாசலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் மின்சார வாரிய கோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்டியங்குப்பம், ஊமங்கலம், ஏ.சித்தூர், எம்.பரூர், ஆலடி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட சின்னகண்டியங்குப்பம், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னபண்டாரங்குப்பம், கானாதுகண்டான், நறுமணம், ஊத்தாங்கால், ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, கொல்லிருப்பு, மேலக்குப்பம், கண்டப்பங்குறிச்சி, வரம்பனூர், சேவூர், மதுரவல்லி, ஏ.சித்தூர், சின்னபரூர், எம்.புதூர், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், ராசாபாளையம், ஆலடி, மணக்கொல்லை, மோகாம்பரிகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை விருத்தாசலம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story