வரிச்சியூர், பரவை பகுதியில் இன்று மின்தடை
வரிச்சியூர், பரவை பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக வரிச்சியூர், பரவை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
மதுரை தனியாமங்கலம், கொட்டாம்பட்டி, உறங்கான்பட்டி, நாட்டார்மங்கலம், பனையூர், மேலவளவு, அழகர்கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் உயர் அழுத்தம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் வெள்ளநாயக்கன்பட்டி, புலிமலைப்பட்டி, உறங்கான்பட்டி, கொட்டானிப்ப்பட்டி, பழையூர்பட்டி, அழகிச்சிப்பட்டி, தர்மசானப்பட்டி, தனியாமங்கலம், கண்மாய்பட்டி, முத்தம்பட்டி, குறிஞ்சிப்பட்டி, கோவில்பட்டி, ஆலம்பட்டி, அய்யாபட்டி, சொக்கலிங்கபுரம், மலம்பட்டி, காடம்பட்டி, சீயனத்தன்பட்டி, தம்பட்டாம்பாறை, வரிச்சியூர், மீனாட்சிபுரம், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, அங்காடிமங்கலம், செங்கோட்டை, நாட்டார்மங்கலம், பனையூர், சாமநத்தம், பட்டூர், சேக்கிபட்டி, கல்லம்பட்டி, கடவூர், சத்திரப்பட்டி, தொண்டைமான்பட்டி, அண்டமான், மஞ்சம்பட்டி, காஞ்சரம்பேட்டை ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.
பரவையில் மின்தடை
சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் பெப்சி பீடரிலும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் பீடரிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் பரவை, ஏ.ஐ.பி.இ.ஏ. காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மணிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கொட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு கோட்டம் அரசரடி துணைமின்நிலையத்தில் உள்ள கூடல் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம்பிடாரி கோவில் தெரு, இந்திரா நகர், மேல மற்றும் கீழ வைத்தியநாதபுரம், மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.