நாளை மின்தடை


நாளை மின்தடை
x

பராமரிப்பு பணிக்காக பரவை, துவரிமான் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

மதுரை

ஆனையூர் துணைமின்நிலையத்தில் சாந்திநகர் உயரழுத்தமின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது ெதரு முதல் 7-வது வரை, பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல்நகர், சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமாகல்லூரி, பாத்திமாகல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் ெமயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, மேக்ஸ் அபார்ட்மென்ட், (பாண்டியன் தியேட்டர்), தீபகம் தெரு, வருமான வரி காலனி, டெம்சி காலனி, வைகை தெரு, கணபதி நகர், பொற்றாமரை நகர், ஆர்.எம்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின் செயற்பொறியாளர் லதா கூறினார்.

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாக தீர்த்தம், பாறைப்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story