நாளை மின் நிறுத்தம்
திருப்பனந்தாள் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
கும்பகோணம்:
தமிழ்நாடு மின்வாரிய கும்பகோணம் வடக்கு கோட்ட உதவி செயற்பொறியாளர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல் நாயக்கன் பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story