நாளை மின்சாரம் நிறுத்தம்
திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சிவகாசி,
திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருத்தங்கல்
சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.
ஆவியூர்
ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவியூர், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சுழி, தமிழ்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையப்பட்டி, காத்தான் பட்டி, இலுப்பையூர், பனையூர், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.
அதேபோல புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புல்வாய்க்கரை, ஆவரங்குளம், அ. முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், எஸ்.நாங்கூர், பிள்ளையார்குளம், தச்சனேந்தல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உழக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், இலுப்பைக்குளம், பனைக்குடி, இனக்கனேரி, எஸ். மறைக்குளம், குறவைகுளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் நாைள மின்தடை செய்யப்படும். மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்
விருதுநகர்-மதுரை ரோட்டில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அப்பகுதியில் பழைய மின் கம்பிகளை அதிக திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி மற்றும் மரக் கிளைகளை வெட்டும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் மதுரைரோடு, கச்சேரி ரோடு, லட்சுமிகாலனி, நேருஜிநகரில் சில பகுதிகள், கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்.ஜி.ஓ. காலனியில் முத்தமிழ் வீதி, அம்மன் வீதி, வி.வி.வி. கல்லூரி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.