நாளை மின்சாரம் நிறுத்தம்
தொட்டியபட்டி, சூலக்கரை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
தொட்டியபட்டி, சூலக்கரை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தொட்டியபட்டி
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
ஆதலால் புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.
சூலக்கரை
அதேபோல விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஆதலால் இ்ந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் வளாகம், போலீசார் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாடர்ன் நகர், மாத்தி நாயக்கம்பட்டி ரோடு, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.